Sunday, August 20, 2023

தமிழர் மரபு - அலகு -1 வினாக்கள்

குறுவினா
  1.  இந்திய மொழிக்குடும்பம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  2. திராவிட மொழிக்குடும்பம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது? அவை யாவை?
  3. தென் திராவிட மொழிகள் யாவை?
  4. வடதிராவிட மொழிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
  5. மொழி என்றால் என்ன?
  6. மொழிக்குடும்பம் என்றால் என்ன?
  7. உலக மொழிகளை எத்தனை மொழிக்குடும்பங்களாகப் பகுப்பர்?
  8. சமஸ்கிருதம் எந்த ஆண்டு செம்மொழி தகுதி பெற்றது?
  9. தமிழ் மொழிக்குச் செம்மொழி தகுதி வழங்கப்பட்ட ஆண்டு எது?
  10. தமிழ் என்பதன் பொருள் யாது?
  11. செம்மொழிக்கான தகுதிகளாக வரையறுக்கப்படுபவை யாவை?
  12. தமிழ் செவ்விலக்கியங்கள் மொத்தம் எத்தனை?
  13. தமிழ் செவ்வியல் நூல்களில் இடம்பெற்றுள்ள இலக்கண நூல் எது?
  14. தமிழ் செவ்வியல் நூல்களில் இடம்பெற்றுள்ள காப்பியங்கள் எவை? 
  15. தமிழ் செவ்வியல் நூல்களில் இடம்பெற்றுள்ள உரை நூல் எது?
  16. தமிழ் செவ்வியல் நூல்களில் இடம்பெற்றுள்ள சிற்றிலக்கியம் எது? 
  17. சங்க இலக்கியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  18. பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் மொத்தம் எத்தனை? அவை யாவை?
  19. எட்டுத்தொகையில் அமைந்த அகம் புறம் சார்ந்த நூல் எது?
  20. எட்டுத்தொகையில் அகம் சார்ந்த நூல்கள் எத்தனை? அவை யாவை?
  21. எட்டுத்தொகையில் புறம் சார்ந்த நூல்கள் எத்தனை? அவை யாவை?
  22. பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்கள் எத்தனை? அவை யாவை?
  23. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைப் பெற்று அமைந்துள்ள நூல் எது? 
  24. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்? 
  25. குறுந்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?
  26. அகநானூறுற்றின் வேறு பெயர் என்ன? 
  27. ஐங்குறுநூற்றின் பாடல் எண்ணிக்கை யாது?
  28. ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்? 
  29. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்? 
  30. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  31. தேவார மூவர் யார்?
  32. சைவ சமயக்குரவர் நால்வரின் பெயர்களைக் குறிப்பிடுக.
  33. பன்னிரு திருமுறைகளைப் பாடியோரின் எண்ணிக்கை யாது?
  34. பன்னிரு திருமுறையைத் தொகுத்தது யார்? 
  35. முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவரின் பெயர் யாது?
  36. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவரின் பெயர் என்ன 
  37. முதல் ஆழ்வார்கள் மூவரின் பெயர்களை எழுதுக.
  38. தொண்டரடிப்பொடியாழ்வாரைப் பாடிய ஆழ்வார் பெயர் என்ன? 
  39. பெரிய திருவந்தாதி பாடிய ஆழாவார் யார்?
  40. ஆண்டாளின் வளர்ப்புத்தந்தையின் பெயர் என்ன?
  41. ஆண்டாளின் இயற்பெயர் என்ன?
  42. சைவ சமயத்தின்  முழுமுதல் கடவுள் யார்? 
  43. வைணவ சமயத்தின் முழுமுதல் கடவுள் யார்? 
  44. முதல் கோவை நூல் எது? 
  45. காப்பியங்கள் எவ்வாறு பகுக்கப்படுகிறது?
  46. இரட்டை காப்பியங்கள் யாவை?
  47. ஐஞ்சிறுகாப்பியங்கள் எச்சமயத்தைச் சார்ந்தவை?
  48. ஐம்பெரும் காப்பியங்களில் பௌத்த மத கருத்துக்களைக் கூறும் நூல்கள் யாவை?
  49. சிலப்பதிகாரம் எழுதியவர் யார்? 
  50. குண்டலகேசிக்கு எதிராகத் தோன்றிய நூல் எது? 
  51. காப்பியங்கள் பயனாகக் கூறப்படும் நாற்பொருள் யாவை?
  52. மணிமேகலையை இயற்றியவர் யார்? 
  53. சீவகசிந்தாமணியின் வேறு பெயர்‌ என்ன? 
  54. குண்டலகேசி என்பதன் பொருள் யாது?
  55. பிள்ளைத்தமிழின் வேறு பெயர்கள் யாது? 
  56. சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை யாது? 
  57. முதல் உலா நூல் எது? 
  58. முதல் தூது நூல் எது?  அதை எழுதியவர் யார்?
  59. முதல் கலம்பகம் எது? 
  60. முதல் குறவஞ்சி எது? 
  61. பாரதியார் குறிப்பு வரைக.
  62. பாரதியாரின் முப்பெரும் படைப்புகள் யாவை? 
  63. பாரதியார் இயற்பெயர் என்ன?
  64. பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
  65. சாகித்திய அகாதமி விருது பெற்ற பாரதிதாசனின் படைப்பு எது? 

பெரு வினா
  1. இந்திய மொழிக்குடும்பம் பற்றி விவரி.
  2. திராவிட மொழிக்குடும்பம் பற்றி எழுதுக.
  3. தென் திராவிட மொழிகள் யாவை? அவை பற்றி சிறு குறிப்பு எழுதுக.
  4. தமிழ் ஒரு செவ்வியல் மொழி நிறுவுக.
  5. தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி குறிப்பிடுக.
  6. தமிழ் செவ்விலக்கியங்கள் பற்றி எழுதுக.
  7. சங்க இலக்கியங்கள் குறித்து எழுதுக.
  8. தமிழ் காப்பியங்கள் பற்றி எழுதுக.
  9. சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துக்கள் யாவை.
  10. சங்க இலக்கியத்தின் சமய சார்பற்ற தன்மை பற்றி எழுதுக.
  11. திருக்குறளில் இடம்பெறுள்ள மேலாண்மை கருத்துக்கள் பற்றி எழுதுக.
  12. தமிழகத்தில் சமண, பௌத்த சமயங்களின் தாக்கம் குறித்து எழுதுக.
  13. சிற்றிலக்கியங்கள் குறிப்பு வரைக.
  14. தமிழகத்தில் நவீன இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக.
  15. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பாரதியார் மற்றும் பாரதிதாசனின் பங்களிப்பு பற்றி எழுதுக
  16. பக்தி இலக்கியம் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
  17. ஆழ்வார்கள் பற்றி குறிப்பு வரைக.
  18. நாயன்மார்கள் குறித்து எழுதுக.

No comments:

Post a Comment