Thursday, June 1, 2023

அலகு 1 - பழந்தமிழ் இலக்கியங்கள்

அறிமுகம் 

        ‌‌எ‌ந்தப் போட்டி தேர்வை எடுத்துக் கொண்டாலும் அதில் வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் முதலில் செய்ய வேண்டியது  முந்தைய வருட  வினாத்தாள்களைப் படித்துப் பார்ப்பது.  அவ்வாறு படித்துப் பார்க்கும்போது  நமக்கு அந்த தேர்வை பற்றிய ஒரு புரிதல் ஏற்படும்.  எந்தெந்த தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். எப்படி எளிதாக அந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்பதையும் புரிந்து கொள்ளலாம். அதனால் இனி வரக்கூடிய பதிவுகளில் நாம் முந்தைய வருடங்களில் NET  தேர்வில் கேட்கப்பட்ட  கேள்விகளை ஒவ்வொரு அலகுகளாக பார்க்கலாம்.

2019ல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  2019 இல் இருந்து 2022 வரை(ஜூன் 2019, டிசம்பர் 2019, 2021, 2022, டிசம்பர் 2022 ) ஐந்து தேர்வுகள்  நடத்தப்பட்டுள்ளன. இந்த ஐந்து வினாத்தாள்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வினாத்தாள் அமைப்பினை புரிந்து கொள்ள முடிகிறது. 

  • வினா-விடை அமைப்பில்  40 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. (எ.கா)       அனுபவக் கதைகள் எந்த வகையுள் அடங்கும்? 1) புராணம் 2)நாட்டார் கதை 3)பழமரபு கதை 4)தேவதைக் கதை                                          
  • இவற்றுள் சரியானது எது? என்ற அமைப்பில் 25 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. (எ.கா) புறநானூற்றில் குறிப்பிடப்படும் நாடுகள் அ)பாரி நாடு    ஆ)காட்டு நாடு     இ)கோனாடு ஈ)முக்காவல் நாடு 1)அ,ஆ,இ,ஈ   2)ஆ,இ,ஈ 3)அ,ஆ,ஈ 4)அ,இ,ஈ                                                           
  • பொருத்துக - 10 வினாக்கள்                    
  • நிரல்படுத்துக - 10 வினாக்கள்               
  • உறுதிக்கூற்று - 5 வினாக்கள்.                 
  • ஒரு பாடல் கொடுத்து அதிலிருந்து ஐந்து கேள்விகள் - இந்த ஐந்து கேள்விகளில், 2 வினா விடை   பொருத்துக-1  நிரல்படுத்துக-1  உறுதிக்கூற்று -1                                         
  • ஒரு பத்தி கொடுத்து அதிலிருந்து 5 கேள்விகள் - இந்த ஐந்து கேள்விகளில், 2 வினா விடை   பொருத்துக -1  நிரல்படுத்துக -1  உறுதிக்கூற்று -1                                          
  • இவற்றை ஒவ்வொரு அலகுகளாக பிரித்துப் பார்க்கும்போது ஒவ்வொரு அலகில் இருந்தும் 8 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

 அலகு -1 : பழந்தமிழ் இலக்கியங்கள்

1) வேங்கட மலைக்கு உரியவன் யார்?

1)அஞ்சி

2)எவ்வி

3)நன்னன்

4) புல்லி

‌2) முழங்கு திரை கொழீய மூரி எக்கர் - மூரி என்பதன் பொருள் என்ன?

1) பகை 

2)பெருமை 

3)வலிமை 

4)தீமை

3) மதுரைக்காஞ்சியில் பாணர் விறலியருக்கு பரிசாக பாண்டியன்  கொடுத்தவை

அ)களிறு  ஆ)அணிகலன்கள்   இ)பொற்காசு  ஈ)பொற்தாமரை

இவற்றுள் சரியானது எது?

1)ஆ இ ஈ மட்டும்

2)அ ஆ இ மட்டும்

3)அ ஆ ஈ மட்டும்

4)அ  இ ஈ மட்டும்


4) தாயின் கருவில் இருந்த போது அரச உரிமையைப் பெற்றவன் யார்?

1)நல்லியங்கோடன் 

2)பேகன் 

3)பாரி  

4)கரிகால்வளவன்


5) வில்லின் நாணில் அம்பு வைத்துச் செலுத்துமிடம் எது என குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகின்றது

1)உடு

2)வடு

3)பகழி

4)ஆகம்


6) களவழி நாற்பது 

அ) அகவற்பாவால் ஆனது

ஆ) போர்க்களத்தைப் பாடியது

இ) சோழ அரசனின் வெற்றியைப் பாடியது

ஈ) சேர அரசனின் தோல்வியைப் பாடியது

இவற்றுள் சரியானது எது?

1)அ ஆ இ

2)ஆ இ ஈ

3)அ இ ஈ

4)அ ஆ ஈ


7) நிரல்படுத்துக: பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து

அ)சேரலாதனைக் குறித்துப் பாடப் பெற்றது

ஆ)இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என பதிகம் குறிப்பிடும்

இ)போர் அடுதானைச் சேரலாத என முன்னிலைப்படுத்தும்

ஈ)குமட்டூர் கண்ணனாரால் பாடப்பெற்றது

இவற்றுள் சரியானது

1)அ, ஆ, இ, ஈ

2)ஆ, இ, அ, ஈ

3)ஈ, அ,  ஆ, இ

4)ஆ, ஈ, அ, இ


8) அகநானூற்றில் பெயர் தெரியாத புலவர்கள் பாடிய பாடல்கள் எத்தனை?

1) 10 

2) 56 

3) 13

4) 3


9) மிகக் குறைந்த அடிகளை உடையது

1)குறுந்தொகை 

2)புறநானூறு 

3)ஐங்குறுநூறு 

4)நற்றிணை


10) பட்டியல் ஒன்றை  பட்டியல் இரண்டுடன் பொருத்துக

பட்டியல் ஒன்று -            பட்டியல் இரண்டு

அ)கபிலர்  -           ‌‌‌க) அதிகமான்

ஆ)அரிசில்கிழார்  -   ங) பாரி

இ)மோசிகீரனார்    -   ச) கரிகால்வளவன்

ஈ)வெண்ணிக்குயத்தியார் -  ஞ) நன்னன்

1) அ - க, ஆ - ங, இ - ச, ஈ - ஞ

2) அ - ங, ஆ - க, இ - ஞ, ஈ - ச

3) அ - ச, ஆ - ஞ , இ - ங , ஈ - க

4) அ - ஞ, ஆ - ச, இ - க , ஈ - ங


11) அகவற்பாக்களால் அமைந்த பாடல்களைக் கொண்டு நூல்? 

அ) குறுந்தொகை 

ஆ)பரிபாடல் 

இ)நற்றிணை 

ஈ)பதிற்றுப்பத்து 

இவற்றுள் சரியானது 

1) அ, ஆ, ஈ மட்டும்

2) அ, இ, ஈ மட்டும்

3) ஆ, இ, ஈ மட்டும்

4) அ, ஆ, இ மட்டும்



12) பச்சைப்  பயிறுக்கு ஈடாகப் பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருள்

 1)நெய் 

2)கள் 

3)கெடிறு மீன் 

4)உப்பு


13) முல்லைப்பாட்டில் விரிச்சி மொழியாக அமையும் தொடர்

1)கொன்னே நிகழ்தரும்

2) இன்மை தீர வருவன்

3) கானக்கோழி கதிர் குத்த

4) இன்னே  வருகுவர் தாயார்


14) மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் - என்று பாடியவர்

1)மாமூலனார்

2)மோசிகீரனார்

3)அவ்வையார்

4)பரணர்


15) ஒப்புரவு என்பது

1) ஒப்பிடல்

2) தூய்மை செய்தல்

3) உலக நடைமுறை

4) உதவல்


16) கடிஞை என்று நாலடியார் சுட்டுவது

1)பிச்சைப்பாத்திரம் 

2)காலங்காட்டும் கருவி 

3)மருந்துப்பெட்டி 

4)கல்விச்சாலை


17) கலித்தொகையில்

அ) கைகிளை, பெருந்திணைப் பாடல்கள் உள்ளன

ஆ) பாலைத்திணை முதலில் அமைந்துள்ளது

இ) 150 அகப்பாடல்கள் உள்ளன

ஈ) 11 முதல் 80 வரை அடிகள் கொண்ட பாடல்கள் உள்ளன

இவற்றுள் சரியானது எது

1)அ, ஆ, இ, ஈ சரி

2)இ, அ, ஈ சரி

3)ஆ, இ, ஈ சரி

4)அ, ஆ, ஈ சரி


18) உறுதிக்கூற்று (உ) : உணவெனப்படுவது நிலத்தொடு நீரே

காரணக்கூற்று (கா) : இது முல்லைநில உணவு உற்பத்தி முறை சார்ந்த மதிப்பீடு ஆகும்.

மேற்குறிப்பிடப்பட்ட கூற்றுகளில் மிகவும் சரியான விடையை கீழே தரப்பட்டுள்ளவற்றில் இருந்து தெரிவு செய்யவும்

1) (உ) மற்றும் (கா) சரியானவை மற்றும் (கா) (உ)வுக்கு சரியான விளக்கமாகும்

2) (உ)மற்றும் (கா) சரியானவை ஆனால் (கா)  (உ)வுக்கு சரியான விளக்கமன்று.

3) (உ) சரி (கா) தவறு

4) (உ) தவறு (கா) சரி


19) 'உள்ளி விழவு' எங்கு ஆடப்பட்டதாக அகநானூறு குறிப்பிடுகின்றது?

1)பாண்டிய நாடு 

2)மதுரை

3)சேர நாடு 

4)கொங்கு நாடு


20) சுரிதகம் என்பது

1) காதணி

2) இடை அணி

3) தலையணி

4) காலணி


21) எட்டுத்தொகையுள் நீடூர்க் கிழவோன் குறித்துப் பாடப்பட்ட பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

1)புறநானூறு 

2)அகநானூறு 

3)கலித்தொகை

4)நற்றிணை


22)'காடுமுன்னினரே நாடுகொண் டோரும்' - காடு என்பதன் பொருள் என்ன?

1)முல்லை 

2)அத்தம் 

3)சுரம் 

4)இடுகாடு


23) திருமுருகாற்றுப்படையில் வெறியாட்டு ஆடும் வேலன் அணிந்திருந்த மாலையில் இடம் பெற்றிருந்த மலர்கள்

அ)தக்கோலக்காய் 

ஆ)குவளை 

இ)வென்டாளி 

ஈ)பித்தி

இவற்றுள் சரியானது

1)ஆ,ஈ

2)அ,இ

3)அ,ஈ

4)ஆ,இ


24) நெய்தல் நிலத் தலைவனின் பெயர்கள்

அ)மகிழ்நன் 

ஆ)புலம்பன் 

இ)களமன் 

ஈ)கொண்கன்

 இவற்றுள் சரியானது

1)அ,ஈ

2)ஆ,ஈ

3)இ,அ

4)ஆ,இ


25) தழையுடை ஆக்கப் பயன்படுத்தியவை

அ)ஆம்பல் 

ஆ)அவரை 

இ)வேளை

ஈ)நெய்தல் 

இவற்றுள் சரியானது

1)அ,ஈ

2)ஆ,ஈ

3)அ,இ

4)ஆ,இ


26) பட்டியல் ஒன்றை பட்டியல் இரண்டுடன் பொருத்துக

பட்டியல் ஒன்று - பட்டியல் இரண்டு

அ)தடாரி.               -           க) கள் விற்போர்

ஆ)பழையர்          - ங) விரைவு

இ)வேரி.                -   ச) உடுக்கை

ஈ)நொவ்வு.           - ஞ) மது

1) அ-ஞ, ஆ-க, இ-ங, ஈ-ச

2) அ-ங, ஆ-ஞ, இ-ச, ஈ-க

3) அ-ச, ஆ-க, இ-ஞ, ஈ-ங

4) அ-ங, ஆ-க, இ-ஞ, ஈ-ச


27) நிரல்படுத்துக : 

சங்க இலக்கிய நூல்கள் முதன் முதலில் அச்சேறிய ஆண்டுகளின் அடிப்படையில் நிரல்படுத்துக.

அ) பட்டினப்பாலை

ஆ) பரிபாடல்

இ) பத்துப்பாட்டு

ஈ) முல்லைப்பாட்டு

இவற்றுள் சரியானது

1) இ,ஈ,அ,ஆ

2) ஆ,அ,ஈ,இ

3) ஈ,ஆ,இ,அ

4) அ,இ,ஆ,ஈ


28) பொருத்துக சங்க இலக்கியத்தில் குறுநில மன்னர்களும் அவர்களைப் பற்றிய பாடல் எண்ணிக்கையும்

அ) வேள்பாரி               -       க) 07

ஆ) பேகன்                    -        ங) 04

இ) காரி                         -          ச) 17

ஈ) எழினி                       -         ஞ) 06

1)அ-ங, ஆ-ஞ, இ-க, ஈ-ச

2)அ-ஞ, ஆ-ங, இ-ச, ஈ-க

3)அ-ச, ஆ-ஞ, இ-க, ஈ-ங

4)அ-ச, ஆ-க, இ-ஞ, ஈ-ங


29) உறுதிக்கூற்று (உ) : 'கற்றோர் ஏத்தம் கலி' என கலித்தொகை சிறப்பிக்கப்படுகிறது.

காரணம் (கா) : இதன் கருத்துச்செறிவு பொருள் செறிவு ஆகியவற்றை கற்றோரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

1)(உ) தவறு, (கா) சரி

2) (உ) சரி, (கா) சரி

3) (உ) தவறு, (கா) தவறு

4) (உ) சரி, (கா) தவறு



Reference

www.ugcnet.nta.nic.in 

No comments:

Post a Comment