Saturday, January 8, 2022

தமிழ் இலக்கிய வினா விடை

       தமிழ் இலக்கிய வினா விடை 

                           சங்க இலக்கியம் 

 
1) சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுவது எது ?

    எட்டுத்தொகை , பத்துப்பாட்டு 

2) எட்டுத்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 2352  தனிநிலை 

    செய்யுள்கள் , 6 கடவுள் வாழ்த்து , 2352+6 = 2358

3) எட்டுத்தொகை நூல்களில் முதலில் தொகுக்கப்பட்ட நூல் எது ?

    குறுந்தொகை  

4) எட்டுத்தொகையில் 'நல்' என்ற அடைமொழி பெற்ற நூல் எது ?

    நற்றிணை  

5) எட்டுத்தொகையில் இசையினால் பெயர் பெற்ற பாடல் தொகுதி எது ?

    பரிபாடல் 

6) கற்றறிந்தார் ஏத்தும் நூலாகச் சிறப்பிக்கப்படுவது எது ?

    கலித்தொகை   

7) எட்டுத்தொகையில் வரலாற்றுக் குறிப்புகளைத் தன்னகத்தே கொண்ட நூல் 

    எது ?

    அகநானுறு 

8) எட்டுத்தொகையில் அமைந்துள்ள அகம் சார்ந்த நூல்கள் எத்தனை ?

    ஐந்து 

9) எட்டுத்தொகையில் அகம்புறம் சார்ந்த நூல் எது?

    பரிபாடல் 

10) எட்டுத்தொகையில் புறம் சார்ந்த நூல்கள் எத்தனை ?

    இரண்டு 

No comments:

Post a Comment