தமிழ் இலக்கண வினா விடை- 3
1) தன்மை அணியின் வேறு பெயர் என்ன?
தன்மை நவிற்சி
வடநூலார் - சுவபாவோக்தி அலங்காரம்
2) உவமையணி எத்தனை வகைப்படும்?
24
3) சொல் எத்தனை வகைப்படும் ?
நான்கு
4) வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
எட்டு
5) முதல் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எழுவாய் வேற்றுமை
6) இரண்டாம் வேற்றுமையின் வேறுபெயர் என்ன ?
செயப்படுபொருள் வேற்றுமை , ஐ வேற்றுமை
7) மூன்றாம் வேற்றுமையின் வேறுபெயர் என்ன ?
கருவிப்பொருள் வேற்றுமை, ஆல் வேற்றுமை
8) நான்காம் வேற்றுமையின் வேறு பெயர் என்ன ?
கோடற்பொருள் வேற்றுமை, கு வேற்றுமை
9) ஆறாம் வேற்றுமையின் வேறு பெயர் என்ன ?
உடைமை வேற்றுமை, கிழமை வேற்றுமை
10) ஏழாம் வேற்றுமையின் வேறு பெயர் என்ன ?
இட வேற்றுமை
No comments:
Post a Comment