தேசியத் தகுதி தேர்வு(NET)
வணக்கம்! NTA UGC-NET தேர்வு பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது தேசிய அளவில் உதவி பேராசிரியர் (ASSISTANT PROFESSOR) மற்றும் இளநிலை ஆய்வு உதவித்தொகை (JUNIOR RESEARCH FELLOWSHIP) பெறுவதற்கான ஒரு தகுதித் தேர்வாகும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதற்கு https://ugcnet.nta.nic.in/ என்ற இணைய தளத்தில் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
தகுதி
UGC NET தேர்வ P.G. படிக்கிறவங்க, படிச்சு முடிச்சவங்க எழுதலாம்.
எளிதில் வெற்றிபெற
தமிழ்மொழியில் முதுகலை படிச்சவங்க இந்த தேர்வில் எளிதாக வெற்றிபெறனும் என்ற குறிக்கோளோட குறிப்புகளை வெளியிட இருக்கிறோம்.
UGC NET தேர்வில் மொத்தம் இரண்டு தாள்கள் இருக்கின்றன. முதல் தாள் ஆங்கிலத்தில் அமையும். இந்தத் தேர்வில் எளிதாக வெற்றிபெற இரண்டு தாள்களுக்கும் சமமான முக்கியத்துவம் தரவேண்டும்.
ஒரு சில அலகுகளுக்கு முதன்மை கொடுத்து படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது. இந்த வலைப்பூ பக்கம் ஒவ்வொரு அலகுகளாகக் குறிப்புகளை வெளியிடவுள்ளது. இத்தேர்வுக்குத் தயார் செய்வோர் இதனால் பயனடைவீர்கள் என்று நம்புகிறோம்.
முதல் தாள்
முதல் தாளில் மொத்தம் பத்து அலகுகள் உள்ளன. 50 வினாக்கள் கேட்கப்பட்டு ஒவ்வொரு வினாவிற்கும் 2 மதிப்பெண்கள் வீதம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதில் பத்தி வினாவிடை (COMPREHENSION), திறனறிதல் (APTITUDE), புள்ளிவிவரங்கள் (DATA INTERPRETATION), தொடர்புதிறன் (COMMUNICATION) இப்படி சில அலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே எளிதில் வெற்றிபெறலாம். ஒவ்வொரு அலகுகளாக அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். முதல் தாள பொருத்த வரைக்கும் நம்ம UPKAR'S அப்படிங்கற புத்தகத்தில் இருக்கக்கூடிய செய்திகளை உள்வாங்கி கொண்டு குறிப்புகளை வெளியிட இருக்கிறோம்.
இரண்டாம் தாள்
இரண்டாம் தாளில் மொத்தம் பத்து அலகுகள் உள்ளன. 100 வினாக்கள் கேட்கப்பட்டு ஒவ்வொரு வினாவிற்கும் இரண்டு மதிப்பெண்கள் வீதம் 200 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதில் பழந்தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், உரையாசிரியர்கள், இலக்கணங்கள், இலக்கண உரையாசிரியர்கள், மொழி வரலாறு, நோக்கு நூல்கள், இலக்கிய திறனாய்வு, தமிழக வரலாறு, தமிழகப் பண்பாடு, தமிழும் புறத்துறைகளும் என்ற அலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தாலே எளிதில் வெற்றி பெறலாம். இரண்டாம் தாளைப் பொறுத்தவரை தமிழ் இலக்கிய வரலாறு, உரையாசிரியர்கள் - மு.வை.அரவிந்தன், தமிழக வரலாறு மக்கள் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை, இலக்கிய திறனாய்வு, திறனாய்வுக் கலை - தி.சு.நடராசன், ஆய்வியல் நெறிகள் - கு.வெ.பாலசுப்ரமணியம் இப்படி இன்னும் பல நூல்களிலும் உள்ள முக்கிய கருத்துகளைத் தொகுத்து வெளியிட இருக்கிறோம் .பத்து அலகுகளிலும் உள்ள முக்கியமான செய்திகளை, குறிப்புகளை அடுத்தடுத்த பதிவுகளில் பதிவிடுகிறோம்.
வாழ்க வளமுடன்💐
No comments:
Post a Comment