Monday, June 5, 2023

அலகு - 5 : இலக்கணங்கள்

 அலகு - 5 : இலக்கணங்கள்


1) 'சார்ந்துவரல் மரபினின்று' வேறுபட்ட ஒன்றைச் சுட்டுக.

1) குற்றியலுகரம்

2) குற்றியலிகரம்

3) ஆய்தம்

4) உயிர்மெய்


2) 'குறைச்சொற் கிளவி குறைக்கும் வழி அறிதல்' - மரபில் அமைந்த தொடர்

1) தாமரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி

2) வேதின வெரிநி ஓதி முதுபோத்து

3) மரையின் மாருமுன்றில்

4) அஞ்சில் ஓதி அசைநடை பாண்மகள்


3)'புனை இழை இழந்தபின் புலம்பொடு வைகி மனையகத்துறையும் மைந்தன் நிலை உரைத்தன்று' - என்பது 1)தாமதநிலை 

2)முதுபாலை

3)தபுதாரநிலை 

4)மூதானந்தம்


4) மருட்பாவிற்கு ஓசை முடிபு

1) அகவலும் செப்பலும்

2) அகவலும் துள்ளலும்

3) துள்ளலும் தூங்கலும்

4) தூங்கலும் அகவலும்


5) பொருத்துக

பட்டியல் ஒன்று (தொல்காப்பியர் குறிக்கும் விலங்குகள்) -  பட்டியல் இரண்டு (இனங்கள்)

அ) குரங்கு  - க) கோட்டான்

ஆ) கூகை   - ங) கண்டி

இ) குதிரை - ச) கடுவன்

ஈ) எருமை   - ஞ) சேவல்

1)அ-ஞ,ஆ-ச,இ-க,ஈ-ங

2)அ-ச,ஆ-க,இ-ஞ,ஈ-ங

3)அ-ச,ஆ-ஞ,இ-ங,ஈ-க

4)அ-ங,ஆ-ஞ,இ-க,ஈ-ச


6) 'நன்னூல்' இனவெழுத்து என்பதற்குக் கூறும் காரணங்களை நிரல்படுத்துக.

அ) தானம்

ஆ) அளவு

இ) வடிவு

ஈ) முயற்சி

உ) பொருள்

இவற்றுள் சரியானது

1)ஆ,அ,உ,ஈ,இ

2)ஆ,அ,இ,உ,ஈ

3)அ,இ,உ,ஈ,ஆ

4)அ,ஈ,ஆ,உ,இ


7) உறுதிக்கூற்று (உ) : ஆறாம் வேற்றுமைக்குக் குறை வேற்றுமை என்றும் ஒரு பெயர் உண்டு.

காரணம் (கா) : அது தொடர்மொழியீற்றில் வராததாலும் உயர்திணைப் பெயரோடு முடியாமையாலும்

1) (உ)மற்றும் (கா) சரியானவை மற்றும் (கா) (உ)க்கு சரியான விளக்கம் ஆகும்

2) (உ) மற்றும் (கா) சரியானவை ஆனால் (கா) (உ)க்கு சரியான விளக்கம் அன்று

3) (உ) சரி (கா) தவறு

4) (உ) தவறு (கா) சரி


8) "உண்ண வந்தான்" என்பது

1) ஆறாம் வேற்றுமைப் புணர்ச்சி

2) செய்த வாய்ப்பாட்டுப் புணர்ச்சி

3) வினையடைப் புணர்ச்சி

4) அல்வழிப் புணர்ச்சி



9) 'வருங்கால்' என்ற காலம் கண்ணிய வினை எச்சத்தில் முதல் சொல் எது?

1) வினையடை

2) பெயரெச்சம்

3) வினையெச்சம்

4) முற்று வினை


10) 'அன்பின் ஐந்திணை' எனத் தொடங்கும் அகப்பொருள் இலக்கண நூல் எது?

1) தொல்காப்பியம்

2) நம்பி அகப்பொருள்

3) இறையனார் அகப்பொருள்

4) மாறன் அகப்பொருள்

No comments:

Post a Comment