அலகு- 2: காப்பியங்கள்
1) வேதமாம் அமுதம் எழுதிய வாய் - என்னும் தொடர் இடம் பெற்றுள்ள காப்பியம்
1) கம்பராமாயணம்
2) நாயகம் ஒரு காவியம்
3) வில்லிபாரதம்
4) சீறாப்புராணம்
2) நாககுமார காவியத்தை மு. சண்முகம் பிள்ளை பதிப்பித்த ஆண்டு
1) 1971
2) 1978
3) 1951
4) 1923
3) உதயணகுமார காவியத்தில் உதயணனை சிறைப்படுத்தியவன்
1) யூகி
2) சதானிகன்
3) பிரச்சோதனன்
4) யசோதரன்
4) இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெற்றதாக சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது?
1) 7
2) 24
3) 28
4) 30
5) விலாதத்து காண்டத்தில் இடம்பெற்றுள்ள சருக்கங்கள்
அ) நதி கடந்த சருக்கம்
ஆ) கரம்பொருத்து சருக்கம்
இ) மணம்புரிச் சருக்கம்
ஈ) நபி பட்டம் பெற்ற சருக்கம்
இவற்றுள் சரியானது
1) அ,ஆ,இ
2) அ,ஆ,ஈ
3) ஆ,இ,ஈ
4) அ,இ,ஈ
6) மணிமேகலையுடன் தொடர்புடைய ஊர்கள்
அ)பூம்புகார்
ஆ)செஞ்சி
இ)வஞ்சி மாநகரம்
ஈ)காஞ்சிபுரம்
இவற்றுள் சரியானது
1) அ,ஆ,இ மட்டும்
2) அ,ஆ,ஈ மட்டும்
3) ஆ,இ,ஈ மட்டும்
4) அ,இ,ஈ மட்டும்
7) பொருத்துக
பட்டியல் ஒன்று (காப்பியங்கள்) பட்டியல் இரண்டு (பாடல்களின் எண்ணிக்கை)
அ)வளையாபதி - க) 3145
ஆ)சீவகசிந்தாமணி - ங) 72
இ)குண்டலகேசி - ச) 170
ஈ)நாககுமார காவியம் - ஞ) 224
1) அ-ஞ,ஆ-ச,இ-ங,ஈ-க
2)அ-ங,ஆ-க,இ-ஞ,ஈ-ச
3)அ-ங,ஆ-க,இ-ச,ஈ-ஞ
4)அ-ச,ஆ-க,இ-ங,ஈ-ஞ
8) நிரல்படுத்துக : மணிமேகலையில் விசாகை தருமதத்தனுக்குக் கூறியவை
அ) செல்வம் நில்லாது
ஆ) இளமை நில்லாது
இ) யாக்கை நில்லது
ஈ) அறமே விழுத்துணை
இவற்றுள் சரியானது
1) அ,ஆ,இ,ஈ
2) அ,இ,அ,ஈ
3) இ,ஆ,அ,ஈ
4) ஆ,இ,அ,ஈ
9) உறுதிக்கூற்று (உ) :சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்
காரணம் (கா) : இரண்டு காப்பியங்களும் ஒரே சமயத்தையே பேசுகின்றன.
1) (உ)சரி , (கா) தவறு
2) (உ) சரி , (கா) சரி
3) (உ) தவறு , (கா) சரி
4) (உ) தவறு, (கா) தவறு
10) மணிமேகலையின் எண்பேராயம் பற்றிய குறிப்பு இடம்பெறும் காதை
1) சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
2) மலர்வனம் புக்க காதை
3) சிறைவிடு காதை
4) விழாவறை கதை
No comments:
Post a Comment